Tuesday 5 May 2009

தி.மு.க ஆட்சி ஏன் கலைக்கபட்டது?

கடந்த சில மாதங்களுக்கு முன் தி.மு.க தலைவரின் ஏமாற்று அறிக்கையில் "ஈழ விடுதலைக்கா எம் கழகம் இரு தடவை ஆட்சியை இழந்துள்ளது" என்று குறிப்பிட்டு இருந்தார். இவ்வறிக்கையின் உண்மைகளை அறிவதே இக்கட்டுரையின் பிராதான நோக்கம். தி.மு.க தலைவரின் பேச்சு திறன் முலம் அவர் நடந்த வரலாற்றை திரிபுபடுத்துகின்றார்.
இரு ஆட்சி கலைப்புக்கான காரணத்தை சற்று விரிபாகவே பார்க்கவேண்டியுள்ளது.
முதலாவது ஆட்சி கலைப்பு
முதலாவது ஆட்சி கலைப்பு 1976 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சாராக இருக்கும் போது நடந்தேறியது. அப்போது மத்தியில் இந்திரா பிரதமராக இருந்தார். இக்கலைப்புக்கு முன் மொழிந்தவர் மறைந்த மக்கள் திலகம் எ.ம்.ஜி.ஆர் ஆகும். தி.மு.க வின் ஆட்சியில் உழல்/லஞ்சம் தலை விரித்தாடுகின்றது என்ற புகாரின் அடிப்படையில் இந்திய அரசியல் சட்டம் 356 ஆம் பிரிவு உபயோகித்து தி.மு.க வின் ஆட்சி கலைக்கபட்டது.

தி.மு.க ஆட்சி 15/3/1971 தொடக்கம் 31/01/1976 வரை நிடித்தது. அதன் பின்னர் ஆட்சி கலைப்பால் ஜானாதிபதி ஆட்சி 30/06/1977 வரை நிடித்தது. அதன் பின்பு நடந்த தேர்தலின் எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்றார்.
இதன் பின்பு சுமார் 12 ஆண்டுகாலம் தி.மு.க வால் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. எம்.ஜி.ஆர் ரின் மறைவுக்கு பின் 1989 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க அரியனை எறியது. அதுவும் அதிக காலம் நிடிக்கவில்லை!!

எம்.ஜி.ஆர் ரின் புகார் தவிந்து இன்னுமொருகாரணமும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் உண்டு. அப்போது மத்தியில் இந்திரா பொது தேர்தலை தவிர்ப்பதற்காக 26/06/1975 இல் அவரசகால நிலையை பிரகனப்படுத்தி இருந்தார். தனக்கு ஒத்துழையாத தலைவர்களை நாட்டின் பாதுகாப்பை காராணம் காட்டி சிறைப்படுத்தினார், அத்துடன் சிலரின் ஆட்சியும் கலைக்கபட்டது.
தி.மு.க அவரசகால நிலையை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தியது. இந்த தலையிடியை போக்குவதற்கு இந்திரா எம்.ஜி.ஆர்r இன் ஒரு கருவியாக பயன் படுத்தினார். இதைப்போலவே இந்திராவால் குஜராத் ஆட்சியும் கலைக்கபட்டது.
இக் காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் விரியம் அடையவே இல்லை ஆனால் அதே நேரத்தில் தான் த.வி.கூ உதயமானதும் அதைத்தொடர்ந்த வட்டுகோட்டை ஈழ பிரகடனமும்.
ஆகவே கருணாநிதி சொல்வது போல் ஆட்சி கலைப்புக்கும் ஈழ போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தோன்றவில்லை.
இரண்டாம் ஆட்சி கவிழ்ப்பு
இரண்டாம் ஆட்சி கவிழ்ப்பு 30/01/1991 இல் நடந்தேறியது. அப்போது சொல்லப்பட்ட காரணம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும் அதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு தி.மு.க அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமானக இருந்தவர்கள் ஈழ போராளிக்குழுக்கள் (குறிப்பாக புலிகள்) என்றும், அவர்களுக்கு தி.மு.க அரசு துனைபோவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த காலகட்டத்தில் தான் ஜெயலலிதாவின் ஈழ/புலி எதிர்ப்பு நிலை ஆரம்பமாகின்றது. அதே சமயம் தி.மு.க வுக்கு ஈழ/புலி ஆதரவு சாயம் பூசப்பட்டது. ஆகவே ஜெயலலிதாவின் ஈழ/புலி எதிர்ப்பு நிலைக்கு முதன்மை காராணம் அரசியலே என்பது தெளிவாகின்றது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு அப்போது நடந்த மிக முக்கியமான சம்பவம், ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் பத்மநாபாவின் படுகொலை. இது ஆனி மாதம் 1990 இல் சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இவருடன் 13 ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களும், 2 பொதுமக்களும் கொலை செய்யபட்டனர்.
கவனிக்கவும், ஆட்சி கலைக்கபட்டது 30/01/91 இல் படுகொலை நடந்தது 19/06/1990 இல். ஏன் உடனே ஆட்சியை ஜானாதிபதி கலைக்கவில்லை?
காரணம் அ.தி.மு.க வுக்கு இசைவான அரசு அப்போது மத்தியில் இல்லை என்பாதால்.
மத்தியில் யார்?
89 இல் நடந்த பொது தேர்தலில் ராஜீவ் தலமையிலான கூட்டனி (அ.தி.மு.க உட்பட) தோல்வியை தழுவியது, ஜானதா தளம், பி.ஜே.பி கூட்டனி ஆட்சியை கைப்பற்றயது. வி.பி சிங் (ஜானதா தளம்) 02/12/1989 இல் பிரதம மந்திரியானர். ஆனால் அவரால் 10/11/1990 வரை தான் ஆட்சி செய்யமுடிந்தது. இவரின் காலத்தில் தான் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.
ஜானதா தளத்தில் இருந்து பிரிந்து வந்து சமயாவாடி ஜானதா தளம் என்ற புதுக்கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சியான காங்கரசின் ஆதரவோடு சந்திர சேகர் வி.பி. சிங் க்கு பின் பிரதமனானர்.
இப்போது அ.தி.மு.க வுக்கு சார்பான ஆட்சி மத்தியில், ஆகவே பழைய ( 6 மாதத்துக்கு முன்) படுகொலையை காரணம் காட்டி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று தி.மு.க வின் ஆட்சி 30/01/1991 கலைக்கப்பட்டது.
சந்திர சேகர்க்கான ஆதரவை ராஜீவ் விலக்கிக்கொண்டதால் மறுபடியும் பொது தேர்தல் 91 இல் வந்தது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தான் அவர் 21/05/1991 இல் கொலை செய்யப்பட்டார்.
இரு ஆட்சி கவிழ்ப்பிலும் மாநிலத்தின் எதிர்க்கட்சியான அ.தி.மு.க முன் மொழிய, மத்தியில் அதிகாரத்தில் இருந்த காங்கரஸ் வழி மொழிய ஜானாதிப்தி நிறைவேற்றினார்.
இதில் ஈழ போராட்டமோ/புலிகளோ எங்கே வருகின்றார்கள். இரண்டாம் ஆட்சி கலைப்பில் பத்மநாபாவின் படுகொலை ஒரு பங்கு வகிக்கிறது என்பது உண்மையே தவிர அது முதன்மை காரணம் அல்ல.

முன்றாவது ஆட்சி கலைப்புக்கு சந்தர்ப்பம் உள்ளதா?
2009 இன் தேர்தல் முடிவுகளே அதை நிர்ணயிக்கும்.
அ.தி.மு.க ஈழ பிரச்சனையை காற்றில் விட்டுவிட்டு காங்கரஸ்க்கு ஆதரவு அளிக்குமானால், காங்கரஸ் தி.மு.க வின் மாநில அரசுக்கு வழங்கிவரும் ஆதரவை விலக்கி கொள்ளும் பட்சத்தில் தி.மு.க வினால் பெருண்பாண்மை காட்டயியலாமல் போகலாம்.
அப்படி நடக்குமானால் உடனே சட்டமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படும். அந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுமா? தமிழக மக்கள் ஜெயலலிதாவின் விரைவான கொள்கை மாற்றத்தை (ஈழத்து எதிர் நிலை) மறந்து வாக்களிப்பார்களா? வை.கோ அ.தி.மு.க கூட்டனியில் தொடர்வாரா?
அ.தி.மு.க க்கு வெற்றி வாய்ப்புகள் குறையும் பட்சத்தில் தி.மு.க வின் ஆட்சியை கலைப்பதன் லாபம் தான் என்ன?
ஆகவே இதற்கு சாத்திய கூறுகள் அதிகம் இல்லை.
ஆனால் மத்தியில் காங்கரஸ் தவிந்த அ.தி.மு.க வின் ஆதரவு கட்சி ஆட்சியில் அமர்ந்தால் 356ஆம் பிரிவின் கீழ் (எதாவது ஒரு காரணத்தைக்காட்டி) ஆட்சி கலைக்க படலாம். அதற்கு ம.தி.மு.க , ப.மா.க வின் ஆதரவும் கிடைக்கும்...மக்கள் கூட ஆதரிப்பார்கள்..
மே 16 இல் வரும் தேர்தல் முடிவுகளும் அதன் பின் நட்ந்தேறும் பேரங்களும் இதற்கான விடையை சொல்லும்.
நன்றி

No comments:

Post a Comment